Saturday, August 6, 2011

இந்திய-பாகிஸ்தான் போர், 1965

இந்திய-பாகிஸ்தான் போர், 1965

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய-பாகிஸ்தான் போர், 1965
இந்திய-பாகிஸ்தான் போர்களின் பகுதி
நாள் ஆகஸ்ட் - செப்டம்பர் 23, 1965
இடம் இந்திய உபகண்டம்
முடிவு தாஷ்கெண்ட் ஒப்பந்தம்
காரணம் பாகிஸ்தானின் பின்பலத்துடன் தீவிரவாதிகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவியமை
பிரிவினர்
Flag of India.svg
இந்தியா
Flag of Pakistan.svg
பாகிஸ்தான்
தளபதிகள்
ஜொயந்தோ நாத் சவுத்திரி
ஹர்பாக்ஷ் சிங்
அயூப் கான்
முசா கான்


இழப்புகள்
3,264 பேர் கொல்லப்பட்டனர்[1]
8,623 பேர் காயம்[1]
(ஜூலை முதல் போர்நிறுத்தம் வரை)
4,000 - 8,000 பேர் கொலை அல்லது கைப்பற்றப்பட்டனர்[2][3][4]
(ஜூலை முதல் செப்டம்பர் 6) 3,800 பேர் கொலை[5]
(செப்டம்பர் 6 - 22)
இந்திய-பாகிஸ்தான் போர், 1965 (Indo-Pakistani War of 1965) ஏப்ரல் 1965 முதல் செப்டம்பர் 1965 வரை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்ற போரைக் குறிக்கும். இது இருநாடுகளுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் குறித்து உருவான இரண்டாவது காஷ்மீர் போர் என அழைக்கப்படுகிறது. முதலாவது காஷ்மீர் போர் 1947 இல் இடம்பெற்றது. ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் கிப்ரால்ட்டர் நடவடிக்கை என்ற பெயரில் கிட்டத்தட்ட 600 பாகிஸ்தானியப் படைகள் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவினர். இந்நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை அறிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் இரண்டாவது போர் தொடங்கியது. மொத்தம் ஐந்து வாரங்களாக நடந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். ஐக்கிய நாடுகளின் அமைதி முயற்சிகளை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டு அதன் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் தாஷ்கெண்ட் நகரில் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
போரின் பெரும் பகுதி தரைப்படைகளினால் பிரச்சினைக்குரிய காஷ்மீர் பகுதியிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பன்னாட்டு எல்லைப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டது. 1947 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இப்போரின் போதே காஷ்மீர் எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் விமானப் படைகள் தரைப் படைக்கு உதவியாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். ஏனைய இந்திய-பாகிஸ்தான் போர்களைப் போலவே இப்போர் நிலவரங்கள், மற்றும் விவரங்கள் பெருமளவு வெளியில் தெரிய வரவில்லை.
போரின் தொடக்கத்தில் இரு நாடுகளும் சம நிலையிலேயே இருந்தன. இந்தியாவின் டித்வால், யூரி, பன்ச் ஆகிய பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றியது. பாகிஸ்தானின் மூன்று முக்கிய இராணுவத் தளங்களை இந்தியா கைப்பற்றியது. செப்டம்பர் 1 இல் ஜம்மு பகுதிக்குள் அக்நூர் பகுதியில் பாகிஸ்தானின் ஊடுருவலை இந்தியா விமானப் படையின் உதவியுடன் தடுத்து நிறுத்தியது.
1965 இந்தோ-பாகிஸ்தான் போரில் இந்திய இராணுவத்தின் 18வது பிரிவின் தாங்கிகள்
செப்டம்பர் 6, 1965 இல் பன்னாட்டு எல்லையைக் கடந்து லாகூர் நகரை அண்டினர்[6]. ஒரு மணி நேரத்தில் லாகூரைக் கைப்பற்றுவோம் என இந்தியா அறிவித்தது. அதே நாளில் பாகிஸ்தான வான் படையினரின் தாக்க்குதலில் 10 இந்திய விமானங்கள் தகர்க்கப்பட்டன. செப்டம்பர் 10 ஆம் நாளில் இந்தியாவில் அம்ரித்சர் நகரை பாகிஸ்தான பீரங்கிப் படையினர் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

[தொகு] போர் நிறுத்தம்

செப்டம்பர் 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது. அதனை அடுத்து சோவியத்தின் தாஷ்கெண்ட் நகரில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் தலைவர் அயூப் கானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி இருநாடுகளும் தங்கள் படையினரை தங்கள் எல்லைப் பகுதிக்குத் திரும்ப அழைக்க முடிவு செய்தனர்.

வங்காளதேச விடுதலைப் போர்

வங்காளதேச விடுதலைப் போர்http://tawp.in/r/11o8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேச விடுதலைப் போர்
1971 surrender.jpg
1971இல் டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி ஏ. ஏ. கே. நியாசி இந்திய தளபதி ஜக்ஜீத் சிங் அரோராவிடம் சரணடைகிறார்.
நாள் 26 மார்ச் 1971 - 16 டிசம்பர் 1971
இடம் வங்காளதேசம்
முடிவு இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் வெற்றி
• வங்காளதேசத்தின் விடுதலை
நிலப்பகுதி
மாற்றங்கள்
கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் ஆனது
பிரிவினர்
வங்காளதேசத்தின் கொடி முக்தி பாஹினி
இந்தியாவின் கொடி இந்தியா
பாக்கித்தானின் கொடி பாகிஸ்தான்
தளபதிகள்
வங்காளதேசத்தின் கொடி தளபதி எம். ஏ. ஜி. ஒஸ்மானி
இந்தியாவின் கொடி தளபதி ஜக்ஜீத் சிங் அரோரா
இந்தியாவின் கொடி சாம் பகதுர்
பாக்கித்தானின் கொடி தளபதி ஏ. ஏ. கே. நியாசி
பாக்கித்தானின் கொடி தளபதி டிக்கா கான்


பலம்
இந்தியா: 250,000 [1]
முக்தி பாஹினி: 100,000[1][2]
பாகிஸ்தான் இராணுவம்: ~ 100,000[மேற்கோள் தேவை]
துணைப்படை: ~25,000[3]
இழப்புகள்
இந்தியா: 1,426 பலி
3,611 காயம் (அரசு ஆவணம்)
1,525 பலி
4,061 காயம் [4]
முக்தி பாஹினி: ??? பலி
பாகிஸ்தான் ~8,000 பலி[மேற்கோள் தேவை]
~10,000 காயம்[மேற்கோள் தேவை]
91,000 போர் கைதி
(56,694 படையினர்
12,192 துணைப்படை
மீதம் குடிமுறை சார்ந்தவர்)[4] [5]
பொது மக்களில் உயிரிழந்தோர்: மதிப்பீட்டின் படி 26,000[6] முதல் 3,000,000 வரை[7]
வங்காளதேச விடுதலைப் போர் 1971இல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் இந்தியாவும் முக்தி பஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் 90,000 போர் கைதிகள் சரணடைந்தனர்.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வரலாறு

பாகிஸ்தான் விடுதலைக்கு பிறகு பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு கிழக்கு பாகிஸ்தானுக்கு குறைந்த அளவு நிதியுதவி கொடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்று கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கண்டனம் செய்தனர். பாகிஸ்தான் அரசு வங்காள மொழியை ஆட்சி மொழியாக உறுதி செய்யவில்லை என காரணமாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு வெறுப்படைந்தனர். 1970இல் கிழக்கு பாகிஸ்தானின் அவாமி லீக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது, ஆனாலும் மேற்கு பாகிஸ்தான் அவாமி லீக் தலைவரை பதவியில் ஏறவிடவில்லை. இதே ஆண்டில் போலா சூறாவளி வங்காளதேசத்தை தாக்கி 300,000 மக்கள் உயிரிழந்தனர். இந்த அழிவுக்கு மேற்கு பாகிஸ்தான் சரியாக நிதியுதவி கொடுக்கவில்லை என்று கிழக்கு பாகிஸ்தானியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பல நிகழுவுகள் காரணமாக கிழக்கு பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் முக்தி பாஹினி என்ற எதிர்ப்பு இராணுவம் உருவாக்கப்பட்டது.

[தொகு] தொடக்கம்

1971இல் மார்ச் 26ஆம் தேதி விடுதலைப் போராட்டத்தை நிறுத்த பாகிஸ்தான் இராணுவம் வங்காள பொது மக்கள் மீது தாக்குதல் செய்தது. இதனால் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை விளம்பல் வெளியிட்டு இந்த நாள் முதல் வங்காளதேசம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரை பல்வேறு வங்காளதேச துணைப்படைகள் முக்தி பாஹினியுக்கு இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி தாக்குதல் செய்துள்ளது.

[தொகு] நிகழ்வுகள்

இப்போர் நடைபெறும்பொழுது இந்திய இராணுவமும் சோவியத் ஒன்றியமும் முக்தி பாஹினியுக்கு நிதியுதவி செய்துள்ளது. இதே நேரத்தில் ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதனால் டிசம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் செய்து 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் தொடங்கியுள்ளது. இந்திரா காந்தி போர் நிலையை கூறி இந்திய இராணுவம் கிழக்கு பாகிஸ்தானை படையெடுத்தது. 13 நாட்களிலேயே போர் முடிந்து இந்தியாவும் முக்தி பாஹினியும் வெற்றி பெற்றுள்ளன. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்து வங்காளதேச மக்கல் விடுதலையை கொண்டாடியுள்ளனர்.
இப்போரில் பல மனித உரிமை மீறுகைகள் நடந்தன என்று தெறிவித்துள்ளது. வங்காளதேச அரசு ஆவணங்கள் பொருந்த 3 மில்லியன் வங்காளதேச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் பாகிஸ்தான் அரசு 26,000 மக்கள் மட்டும் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. மேலும் 200,000 பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டனர்.

இந்திய வரலாறு


இந்திய வரலாறு


இந்திய வரலாற்றை மாற்றிய 27 வருட போர் - பகுதி 1



 
 


இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சிதைக்கப்பட்ட இந்திய வரலாற்றையே பயில்கிறார்கள் . இந்திய வரலாறு பற்றிய எந்த வித பெருமிதமோ அல்லது கௌரவமோ அற்றதாக ஆக்கப்பட்ட மொன்னையான வரலாற்று நிகழ்வுகளின் கோர்வையாக வரலாற்றுப் பாடம் இருக்கிறது. மற்ற எதனையும் விட முக்கியமாக இந்திய சுதந்திர போராட்டத்தைப் பற்றியதாகவும், அதில் இந்திய தேசிய காங்கிரஸின் பங்கு பற்றியதாகவும் வரலாற்றுப் பாடம் இருக்கிறது. காந்தி மற்றும் நேரு ஆகியோர் செய்த சின்ன சின்ன விஷயங்களையும் பயில்கிறோம். மற்ற ஆயிரக்கணக்கானவர்கள் வெறும் பெயர்களை மட்டுமே அறிகிறோம். பலர் பெயர்கள் கூடக் குறிப்பிடப் படுவதில்லை.
என்னுடைய பிரச்னை காந்தி நேரு ஆகியோரை பற்றி அல்ல. அவர்கள் மாமனிதர்கள். ஆயினும், பெரும் வரலாற்று ஓட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று, பிற முக்கியமான நிகழ்வுகள் பின்னடைவு கொள்கின்றன.
ஆகவே, இந்திய வரலாற்றையும் இந்திய துணைக்கண்டத்தையும் பிரம்மாண்டமாக மாற்றி அமைத்த முக்கியமான ஒரு போரை பற்றி நாம் பேசுவதில்லை, அறிந்திருக்கவும் இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை. இந்த போரே இந்தியாவின் போர்களிலேயே மிகவும் முக்கியமான போர். அந்த காலத்தில் சராசரி ஆயுள் என்பது வெறும் 30 வருடங்களாக இருந்த போது 27 வருடங்களாக நடந்த இந்த போர் ஒரு தலைமுறையின் வாழ்நாள் முழுவதும் நடந்திருக்கிறது என்பதை அறியலாம். இந்த மாபெரும் போருக்குள் நடந்த சண்டைகள் மட்டுமே நூற்றுக்கணக்கில் இருக்கும். இதுவும் இந்தியாவின் பரந்த புவித்தளம் முழுவதும் நடந்திருக்கிறது. மஹாராஷ்டிரா, குஜராத், மத்ய பிரதேஷ், கர்னாடகா என்ற நான்கு முக்கிய மாநிலங்களில் இடைவிடாது நடந்திருக்கிறது இந்த மாபெரும் போர். காலம், இதற்கான செலவு, மனித இழப்பு, பொருள் இழப்பு ஆகிய்வற்றை கணக்கிலெடுத்துப் பார்த்தால், இந்திய வரலாற்றில் இதற்கு இணையான போர் வேறு எதுவும் இல்லை.
இது 1681இல் முகலாய பேரரசர் அவுரங்கசீப் மராத்தா அரசின் மீது படையெடுத்ததிலிருந்து ஆரம்பிக்கிறது. இது 1707இல் அவுரங்கசீப்பின் இறப்போடு முடிவடைகிறது. தன்னிடம் இருந்த அனைத்தையும் இந்த போருக்காக அவுரங்கசீப் செலவழிக்கிறார். இறுதியில் அனைத்தையும் இழக்கிறார்.
இந்தப் போரில் வீரதீர பராக்கிரமங்களை பட்டியலிடும் ஆவல் இயல்பாகவே எழக்கூடும். ஆனால் இந்தப் போர்களின் பின்னணியில் இருந்த அரசியலைப் புரிந்து கொள்வது தான் மிக சுவாரஸ்யமான விஷயம். ஒவ்வொரு போருக்குப் பின்னாலும் அரசியலே இருக்கிறது. ஒவ்வொரு போரையும் அரசியலே நடத்துகிறது. போர் என்பது அரசியலின் மற்றொரு வடிவமே. இந்தப் போரும் விதிவிலக்கல்ல.அதனை தொடரின் இறுதியில் ஆராயலாம்.
சிவாஜி தன் வாழ்நாள் முழுவதும் செய்த ஓய்வு ஒழிவு அற்ற உழைப்பின் பலனை 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் அடைந்தார். தக்காணத்தில் (மஹாராஷ்டிரா, கர்னாடகா) உறுதியாக மராத்தா பேரரசை நிறுவி வைத்தார். கொங்கணிலும் சஹ்யாத்ரிகளிலும் நூற்றுக்கணக்கான கோட்டைகளை நிர்மாணம் செய்து வைத்தார். இவை அவரது அரசின் பாதுகாப்பின் முதுகெலும்பாகும். அதே நேரத்தில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத உறுதியான கப்பல்படையையும் அவர் உருவாக்கி இந்தியாவின் மேற்கு கடற்கரை முழுவதையும் அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தக்காணத்தில் இருந்த சுல்தானேட்டுகளின் மீது கடுமையான அழுத்தத்தை உருவாக்கினார். ஐரோப்பாவிலிருந்து தடவாளங்களை இறக்குமதி செய்வதையும், அரேபியாவிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்வதையும் தடுத்தார். சிவாஜிக்கு எதிராக பலமுறை இந்த சுல்தானேட்டுகள் ஒருங்கிணைந்து போர் தொடுத்தனர். ஆனாலும் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
வடக்கு எல்லையில், பல ராஜ்புத் அரசர்கள் முகலாய பேரரசுக்குக் கீழ் தங்களை சிற்றரசர்களாக ஒப்புவித்துக்கொண்டிருந்தனர். அவுரங்கசீப் தனது சகோதரர்களைக் கொலை செய்தும், தனது தந்தையை சிறையிலடைத்தும் பேரரசராக ஆகியிருந்தார். ராஜ்புத் அரசர்கள் முகலாய அரசுக்கு அடங்கியும், தெற்கில் தக்காண சுல்தானேட்டுகள் பலவீனமாகவும் ஆன நிலையில், ஔரஙசீப் மராட்டா பேரரசைக் குறி வைத்ததில் வியப்பில்லை.
சிவாஜி 1680இல் இறந்த போது, மராத்தா பேரரசு தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்தை விட மிகப்பெரியதாக இருந்தது. அதன் அனைத்து திசைகளிலும் எதிரிகளே இருந்தனர். வடக்கு கடற்கரையில் கோவாவில் போர்ச்சுகீசியர்கள், பம்பாயில் பிரிட்டிஷ்காரர்கள், கொங்கணில் சித்திகள், கர்னாடகாவில் தக்காண சுல்தானேட்டுகள் ஆகியோர் இருந்தனர். ஒருவராலும் நேரடியாக தனியாக மராத்தா பேரரசை எதிர்கொள்ள முடியாமல் இருந்தனர். மராத்தியப் பேரரசை எதிர்க்கும் வலுக் கொண்டதாக அவுரங்கசீப்பின் முகலாய பேரரசு மட்டுமே இருந்தது.
அவுரங்கசீப்போ ஒரு மதவெறியராக இருந்தார். சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிரான மதசகிப்புத்தன்மையற்ற கொள்கையாலும், நடவடிக்கையாலும் ராஜ்புத் அரசர்களும் சீக்கியர்களும் அந்நியப்ப்பட்டிருந்தார்கள். அவர் ஆட்சிக்கு வந்ததும், அவரது ஆட்சியில் இந்துக்களின் வாழ்க்கையை வாழும் நரகமாக்கி இருந்தார். ஜிஸ்யா போன்ற கடுமையான வரிகள் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. பல்லக்கில் இந்துக்கள் பிரயாணம் செய்வது தடைசெய்யப்பட்டது. இந்து கோவில்கள் உடைக்கப்பட்டன. கட்டாய மதமாற்றம் அரசாங்க தூண்டுதலில் வேகமாக நடைபெற்றது. அவுரங்கசீப் இஸ்லாமிய சட்டமான ஷரியாவை அரசாங்க சட்டமாக்க முயன்று தோல்விஅடைந்தார். இது போன்ற முயற்சிகள் ராஜ்புத் அரசர்களையும் சீக்கியர்களையும் ஒதுங்க வைத்தன. இதனால், அவுரங்கசீப் தெக்காணத்திற்கு படையெடுக்க சென்றபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
1681 செப்டம்பரில் மேவார் அரசகுலத்தோடு சண்டையை நிறுத்திக்கொண்ட அவுரங்கசீப் தெக்காணத்துக்குக் கிளம்பி சென்று அங்கு மராத்தா பேரரசை அழிக்க முயன்றார். மராத்தா பேரரசு தோன்றி 50 வருடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. முகலாய அரசரின் சேனையில் ஐந்து லட்சம் போர்வீரர்கள் இருந்தனர். இந்த சேனை மராத்தா அரசின் போர்வீரர்களை விட ஐந்து மடங்கு பெரியது. தவிர முகலாய அரசரிடம் ஏராளமான குதிரைப்படைகள், ஆயுதங்கள், பீரங்கிகள், யானைப்படைகள் இருந்தன. இது தவிர தன்னிடம் இருந்த கஜானாவில் ஏராளமான பொருளையும் வைத்திருந்தார். போர்ச்சுக்கீசியர்கள், பிரிட்டிஷ்காரர்கள், சித்திகள், கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தான்கள் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒருங்கிணைந்த படையினால் மராத்தா பேரரசை முழுவதும் சுற்றி வளைத்து அழிக்க திட்டமிட்டார். இப்படிப்பட்ட ஒருபக்கம் அதிக பலம் கொண்ட ஒரு போர் எப்படி முடியும் முடிந்திருக்கக் கூடும் என்று ஊகிப்பது கடினமல்ல. ஏறத்தாழ மராத்தா அரசு கூட்டமைப்பு (Maratha confederacy) நோக்கி ஒரு அழிவுப்புயல் நகர்ந்தது எனலாம்.
இந்த புயலின் வழியில் ஏராளமான உயிர்ச்சேதமும் அழிவும் தெக்காணத்தில் முடிவற்றதாக நீண்டது. ஆனால், இதன் முடிவில் என்ன நடந்தது என்பது எல்லா கற்பனையையும் எல்லா தர்க்கத்தையும் தோற்கடிப்பதாக இருந்தது. எல்லா புறங்களிலும் வசதி வாய்ப்பற்றவர்களாக இருந்தும் மராத்தியர்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள். தன்னிடமிருந்த கஜானா, ராணுவம், ஆயுதம், அதிகாரம், எண்ணற்ற காலாட்படை இருந்தும், ஆக்கிரமிக்க முனைந்த முகலாயப் பேரரசருக்கு, தங்களது சுதந்திரத்துக்காகப் போராடும் மனிதர்களது வைராக்கியத்தை குறைத்து மதிப்பிடவே முடியாது என்ற உன்னத பாடம் படிப்பிக்கப்பட்டது.
(தொடரும்)

சாந்தல் போராட்டம் – இந்திய விடுதலைப் போரில் ஆதிக்கச் சாதியினரால் ம(றை)றக்கப்பட்ட வரலாறு



ம்ரிகா ( Mrigayaa ) - மிதுன் சக்கரவர்த்தி முதன் முதலில் நடித்து வெளியான இந்திப் படம். 1976-ல் வெளியான இந்த இந்திப் படம் இன்றைய தலைமுறையில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இப்படத்தில் நடித்ததற்காக மிதுன் சகரவர்த்திக்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படத்தின் பிண்ணனி பிரித்தானிய காலனி ஆதிக்கத்து இந்தியாவில் நடந்த பெரும் கலகமான சாந்தல் கலகப் புரட்சியினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பெரும் வெற்றிப்படம். ஆனால் இப்படத்துக்கு விருது கிடைத்தது தவிர சாந்தல் கலவரம் மறக்கப்பட்டும் விட்டது. பிச்சைக்காரனின் வலைப்பூவில் மீண்டும் இதனைப் பற்றி ஒரு சிறுப் பதிவினை எழுதினார். ஆனால் சாந்தல் கலவரம் பற்றி இன்றைய நிலையில் பெரிதாக யாருக்கும் தெரியாத நிலை உள்ளது. அதனை மீண்டும் ஒரு முறை நினைவுப் படுத்தியே இப்பதிவு. அக்கலவரத்தில் உயிர் துறந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் இன்னுயிருக்கு இது சமர்ப்பணம்.

நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை. தன்னை ஒரு கம்யூனிஸ்டாகக் காட்டிக் கொண்டு பணம் சம்பாதிக்கும் இன்றைய இழி நிலையில், உண்மையை எழுத ஒரு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டியது இல்லை எனக் கூறிவிட்டு தொடர்கிறேன்.

சாந்தல் பழங்குடியினர்: ( Santhal Native Tribes )

சாந்தல் பழங்குடியினர் மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவில் வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள். மகாபாரத்தில் வரும் ஏகலைவன் சாந்தல் இனத்தில் தோன்றிய மாவீரன். இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி இனங்களில் ஒன்றான சாந்தல் இனத்தின் இன்றைய மக்கள் தொகை அறுபது லட்சம் பேர் வரை இருக்கின்றனர். பெரும்பாலும் சாந்தல்கள் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிகார், ஒரிசாவில் வாழ்கிறார்கள். இந்த நான்கு மாநிலங்களில் சாந்தல்லாண்ட் பிரிந்துக் கிடக்கிறது என்றுக் கூறலாம். இந்தியாவில் குடியேறிய பூர்வக் குடிகளின் வம்சமே இந்த இனம். இவர்களது மொழி இந்தோ-ஆரியரின் மொழி கிடையாது. அது ஆஸ்திரேலியாவிலும்-மலேசியாவிலும் பேசப்படும் பழங்குடி மொழிகளோடு தொடர்புடைய ஒரு மொழி ஆகும்.

சாந்தல் பழங்குடியினர் எப்போதுமே சாண்டலாண்டினை ( Santhal Land ), அக்காடுகளை தமது தாய் பூமியாக வணங்கி வந்தவர்கள். இந்தோ-ஆரியர்களை எதிர்த்துக் காலம் காலமாக போர் புரிந்து வந்தவர்கள். இன்றும் வடநாட்டில் பழமொழிகள் இந்தோ-ஆரிய தேவ நகரி எழுத்துக்கு மாறிவிட்டாலும். தமது தனித்தன்மையை நிலை நிறுத்தும் வண்ணம் ஒல் சிக்கி என்னும் புதிய எழுத்து முறையில் தமது மொழியை எழுதி வருகிறார்கள். பண்டித இரகுநாத முர்முவினால் இவ்வெழுத்துக்கள் உருவாக்கம் பெற்றன. இதில் இருந்தே சாந்தல் இன மக்கள் தமது தனித்தன்மையை நிறுவி வாழ்வதில் எப்படி பிரியம் கொண்டவர்களாய் இருக்கின்றனர் என்பதை அறியலாம். அவர்களின் மொழி மட்டுமில்லை, இசை, கலாச்சாரம், சமய வணக்கங்கள் அனைத்துமே ஆதிக் கால இந்தியாவின் மிச்சங்கள். ஒன்றிலும் இந்தோ-ஆரியத்தனம் புக முடியவில்லை. இதுவே அவர்களின் பெரிய வெற்றி. அவர்களின் இனக்குழுவில் ஆரிய நால் வருணாசிரமும் கிடையாது. சாதிகள், உட்சாதிகள், முச்சாதிகள் என்ற எந்தக் கேவலமும் கிடையாது. பிறப்பால் பிரிவுகள் கிடையாது. உழைத்து வாழும் ஒரு பெரும் கூட்டம்.

சாந்தல் கலகம்: ( Santhal Revolt )

இப்படியாக ஆதிக் காலம் முழுதுமே எந்தவொரு அரசுக்கும் கீழே வராது, சாந்தல் லாண்ட் சாந்தல் இன மக்களால் ஆளப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்தது. இப்படியான சூழலில் இந்தியாவினை மெல்ல மெல்ல பிரித்தானியர்களின் ஆளுகைக்கு வருகின்றது. சாந்தல்லாண்ட் பகுதிகளும் பிரித்தானியர்களின் ஆட்சியின் கீழ் வருகிறது. ஆரம்பக் காலக்கட்டங்களில் பிரித்தானிய அரசு சாந்தல்லாண்டை சுரண்டவில்லை, மக்களின் சட்டத்திட்டங்களை மீறவில்லை. மயுர்பஞ்ச், சோட்டாநாக்பூர், மிட்னாபூர் என சாந்தல்லாந்தில் உள்ளா காட்டின் வளங்களை அவர்களின் அனுமதியோடே பிரித்தானியர்கள் எடுத்து வந்தார்கள். ஆனால் இந்நிலை நீடிக்கவில்லை.

வங்காளத்தில் இருந்த பிரித்தானிய அரசின் ஏவல்களாகவும், கைக்கூலிகளாகவும் ஆதிக்க சாதியினர், பிராமணரும் நுழைகின்றனர். பிரித்தானிய அரசு ஏஜெண்டுகளாக செயல்பட்ட இவர்கள், சாந்தல்லாண்டின் காடுகளையும், நிலங்களும் ஆதிக்கச் சாதியினர் கைப்பற்ற நினைத்தனர். இதனால் சில நிலங்களை ஜமீந்தார்களும், ஆதிக்கச் சாதியினரும் கைப்பற்ற தொடங்கினர். ஆரம்பக் காலங்களில் பெரிய எதிர்ப்பு தெரிவிக்காத சாந்தல் இனத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பின்வாங்கி ராஜ்மகால் மலையடிவாரங்களுக்கு சென்று வசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வங்காளத்திலும், ஒரிசாவிலும் ஆதிக்கச் சாதியினர் தமது கைப்பிடிக்குள் கொண்டு வந்தனர். சிறிதுக் காலங்களுக்கு பிறகு வட்டிக் காரர்கள் என்றப் போர்வையில் சிறுகடன்களாய் கொடுக்க ஆரம்பித்தனர் ஜமீந்தாரர்களும் ஆதிக்கச் சாதியினரும், அவர்களிடம் கடன்களைப் பெற்ற சாந்தல் இன மக்கள், வட்டி, மீட்டர் வட்டி எனக் கட்ட முடியாமல் போனது, அதற்கு ஈடாக அம்மக்களின் நிலங்களை எழுதி வாங்கிய ஆதிக்கச் சாதியினர் கொஞ்சம் கொஞ்சமாக சாந்தல் இன மக்களை வயல் வேலைகளில் ஈடுப்படுத்தி, பின்னர் அவர்களை கொத்தடிமைகளாக மாற்றினர். இருப்பினும் கடும் உழைப்பாளிகளான சாந்தல் இனத்தவர் அவர்களின் கடன்களை உழைத்துக் கொடுத்தும் வந்தனர். ஆனால் மீட்ட்ர் வட்டி பெருகி பெருகி, அவர்களை தமது கைப்பிடிக்குள் அடிமைகளைப் போல கொண்டுவந்தனர் ஆதிக்கச் சாதியினர் பலர். சாந்தல் இனப் பெண்களை ஆதிக்கச் சாதியினர் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். பல்லாண்டுக் காலமாக சுதந்திரமாக சாந்தல்லாந்தில் வாழ்ந்த சாந்தல் இனத்தவர்கள், தமது சுதந்திரம் பறிபோவதை உணரத் தொடங்கிய காலம் அது.

அப்படியான ஒரு சூழலில் தான் 1855ம் ஆண்டும் ஜூன் 30-ம் நாள், சாந்தல் இன விடுதலைக்காக போராடிய இரு பெரும் சகோதரர்களான சிடோ முர்மு, கங்கு ஆகிய இருவரும் பத்தாயிரம் பேரைத் திரட்டி பிரித்தானியர்களுக்கு எதிரான போரை பிரகடனப் படுத்தினர். அன்றையக் காலக்கட்டத்தில் பிரித்தானிய அரசை எதிர்த்துக் கலகங்கள் செய்வது என்பது மலையை எதிர்த்து நிற்கும் தைரியம் வேண்டும்.

சொல்லப்போனால் இது கலகம் என்பதை விட போர் என்றே சொல்லலாம். பிரித்தானியப் படைகளை சாந்தல் லாந்தில் இருந்து விரட்டும் எண்ணத்தோடு இப்போர் ஆரம்பம் ஆனது. வெறும் வில் அம்புகளை, வைத்து கெரில்லா யுத்தமாக தொடங்கியது. முதலில் பெரும் வெற்றிகளை ஈட்டி வந்த சாந்தல் இனத்தவர், பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கினர். பிரித்தானியரையும், சாந்தல் இனத்தவரையும் மோதச் செய்து ஆதிக்கச் சாதியினர் நழுவிக் கொண்டனர். பிரித்தானிய நவ ஆயுத பலங்களுக்கு முன் சாந்தல் இன மக்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மலைகளிலும் காடுகளிலும் ஆயிரம் ஆயிரம் சாந்தல் போராளிகள் கொன்று குவிக்கப் பட்டனர். அந்தக் காலங்களில் செய்திகளையும், மீடியாக்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரித்தானியர்களும், ஆதிக்கச் சாதியினரும் இந்த செய்திகளைப் பரவ விடாமல் வெற்றிகரமாகத் தடுத்தனர்.

மேஜர் பர்ரோவின் தலைமையிலான வங்காளப் பிரித்தானியப் படைகளி இப்போரில் வெற்றியை ஈட்டியது. ஆனால் ஆயிரம் ஆயிரம் சாந்தல் இளைஞர்களில் தலைகள் துண்டாடப்பட்டதாகவும், பல்லாயிரம் சாந்தல் இனப் பெண்கள் பாலியல் வல்லுறவுக் கொண்டுக் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது, ஆனால் அவற்றை விசாரிக்க பிரித்தானிய அரசோ, இந்திய அதிகாரிகளோ விரும்பவில்லை. அதை அப்படியே மறக்கச் செய்தனர். இப்போரில் சாந்தல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்டனர். சுமார் 15,000 சாந்தல் இனத்தவர் இப்போரில் மடிந்தனர். இந்திய விடுதலைப் போர்களிலேயே குறுகிய காலத்தில் இவ்வளவு உயிர்ப்பலிக் கொடுத்தது சாந்தல் கலகப் போர் தான்.

ஆனால் 1857-ல் உயர்வர்க்க இந்துக்கள், முஸ்லிம்கள் நடத்திய யுத்தத்தை பரப்பி இன்று வரை வரலாற்று புத்தகங்களில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நாம், சாந்தல் கலகத்தைப் பற்றி படிக்கவோ, தெரிந்துக் கொள்ளாமலோ இருந்து வருவது நமக்கு இழுக்காகும்.

ஆனால் சாந்தல்களின் தியாகமும், போராட்டக் குணமும் இன்றும் வேறு வடிவங்களில் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. சாந்தல் கலகம் இந்தியா முழுதும் அறியப்படாமல் போயிருந்தாலும், அதற்குப் பின் பல போராட்டங்களுக்கு அது வித்திட்டது.

1867-68-ல் ஒரிசாவில் நடந்த பூயான், ஜுவாங்கோ கலகம்,
1837-56 வரையிலான கந்தா மக்கள் கலகம், ஒரிசா
1895-ல் நடந்த பிர்சா இயக்கம், பிகார்
1978-82-ல் நடந்த ராஜ்மகால் மலைகளில் பகாரியாக்களின் கலகம்

போன்றவை அதில் மிக முக்கியமானவை.

சாந்தல் கலகம் வெற்றியளிக்கவில்லை என்றாலும், இக்கலகம் பிரித்தானிய அரசின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. பழங்குடி மக்களின் நிலங்களையும், நலங்களையும் முழுதும் பேணாமல் போனாலும் அவர்களைத் தாஜாப் பண்ண சில சட்டங்களை நிறைவேற்றினார்கள்.

1870, இந்திய அரசுச் சட்டம்
1874-ல் அட்டவணை மாவட்டங்கள் சட்டம்
1890-ல் மொண்டாகு-கெல்ம்ச்ஃபொரட் சீர்த்திருத்தம்
1919-ல் இந்திய அரசுச் சட்டம்
1935-ல் இந்திய அரசுச் சட்டம்

ஆகியவை பழங்குடிகளின் நிலங்களைப் பேணுவதற்கு சில வகையில் உதவின.

சாந்தல்களின் போராட்டம் தான் ஜார்க்கண்ட இயக்கத்தைத் தோற்றுவித்தது. சாந்தல் லாந்து அல்லது ஜார்கண்ட் தனிமாநில கோரிக்கை 1920-ல் தோன்றியது. பிகார், ஒரிசா, மேற்குவங்கம், மத்தியப் பிரதேசங்களில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட சாந்தல்களின் நிலங்களை இணைத்து சாந்தல் லாண்ட் அல்லது ஜார்க்கண்ட மாநிலம் அமைக்க போராடி வந்தனர். இதனால் சாந்தல் மக்களின் மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் உறுதி செய்ய முடியும் என அவர்கள் நம்பினர். முக்கியமாக சாந்தல்களின் நிலங்களைத் தான் இன்று இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முயல்கிறது. அவர்கள் உட்பட அனைத்து சகோதர மழைவாழ், பழங்குடிகளின் நிலங்களை வங்காளத்தில் இந்திய கம்யூனிஸ்ட்களாகவும், மார்க்சிய கம்யூனிஸ்ட்களாகவும் அரசியல் நடத்தும் ஆதிக்கச் சாதியினர் கைப்பற்றி வருகின்றனர். அதனை எதிர்த்தே நக்ஸ்லபாரி போராட்டங்கள் ஆரம்பம் ஆகின். அவர்களது போராட்டம் இன்று வரை தொடர்கிறது நம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

எடுத்துக்காட்டாக பழங்குடி இந்தியர்களின் நிலங்களில் இருந்துப் பெறப்படும் வளங்களை அவர்களுக்காக எந்த அரசும் பயன்படுத்துவது இல்லை. சுமார் 150 ஆண்டுக் காலப் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்தியா விடுதலைப் பெற்றாலும், வெள்ளையரால் இழக்கப்பட்ட விடுதலையை மீட்க இன்றும் அவர்கள் போராடி வருகின்றனர்.

அதன் முதற்கட்ட வெற்றியாக நவம்பர் 15, 2000-ம் ஆண்டு ஜார்கண்ட், சத்தீஸ்கர் என்னும் இரண்டு மாநிலங்கள் உருவாகின. இந்திய வரலாற்றிலேயே பழங்குடிகளுக்கு என உருவான முதல் மாநிலம் ஜார்கண்ட் தான். ஆனால், இன்றும் மாநிலத்தை ஆளும் உரிமையைக் கொடுக்கத் தவறி வருகின்றனர் ஆதிக்கச் சாதியினரும், மத்திய அரசும். பழங்குடிகளை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கவே இன்னும் சாந்தல் மொழியினை அரசு தேசிய மொழியாய் அங்கீகாரம் செய்யாமல் காலம் கடத்தி வருகிறது. இன்னும் இவ்விரண்டு மாநிலங்களிலும் ஆளும் மொழியாக இந்தியும், ஆளும் அதிகாரிகளாக மஹாஜன்களும், ஆதிக்கச் சாதியினரும் இருந்து வருவது வேதனையான விசயம் ஆகும்.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மட்டுமில்லாமல், வங்காளத்தின் மிட்னாப்பூர் உட்பட்ட பகுதிகள், ஒரிசாவின் மேற்கு மாவட்டங்களை இணைத்து பழங்குடி மக்களின் சாந்தல் லாண்ட் உருவாக்கல் வேண்டும், அம்மாநிலத்தின் வளங்களையும், ஆளும் அதிகாரத்தையும் அம்மக்களிடமே கொடுக்கப்படல் வேண்டும். அவர்களின் மொழி கலாச்சாரம் நிலம் ஆகிய உரிமைகளை இந்திய அரசு பேண முன்வந்தால் மட்டுமே நக்சல்பாரி இயக்கங்களால் இந்தியாவின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது என நொண்டிச்சாக்கை மூட்டைக் கட்டி வைக்க முடியும்.

இந்திய அரசு செய்ய வேண்டியவை:

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசாவின், வங்காளத்தின் பகுதிகளை இணைத்து சாந்தல்லாந்து உருவாக்கப்படல் வேண்டும்.
சாந்தல், குருக் போன்ற பழங்குடி மொழிகளை அட்டவணை மொழிகளில் இணைக்க வேண்டும். இந்தியின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும்.
சாந்தல் லாந்தின் நிலம், காடுகள், கனிம வளங்களை நிர்வாகம் செய்யவும், அவற்றைப் பயன்படுத்தும் உரிமைகளை அம்மக்களிடமே கொடுக்க வேண்டும்.
அப்பகுதிகளில் இருக்கும் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை தடுக்க வேண்டும்.
சாந்தல் கலகத்தில் உயிர் இழந்த மக்களுக்காக பிரித்தானிய அரசு மன்னிப்புக் கோர வேண்டும். அதற்கு இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - 2

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - 2 print Email
வரலாறு - இந்திய வரலாறு
வியாழன், 28 ஆகஸ்டு 2008 14:31
சுமார் 850 வருடங்கள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியையும் அங்குள்ள முஸ்லிம்களையும் கருவறுத்த ஐரோப்பியரின் கர்வம் அடுத்து இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியையும் துடைத்தெறியத் தூண்டியது. அதற்காக பரங்கியர் பெற்றெடுத்ததே கிழக்கிந்தியக் கம்பெனி. இக்கம்பெனியின் ஒரே நோக்கம் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது தான்.
இவ்வாறு கூறும் பொழுது, "வெறும் வியாபாரத்திற்காக ஒரு நாட்டிற்குள் வருபவர்களுக்கு அந்நாட்டையே கைப்பற்றும் மறைமுகத் திட்டம் இருக்குமா?" எனச் சிலருக்கு ஆச்சரியம் தோன்றலாம். ஆனால் ஏகாதிபத்தியக் காலனித்துவச் சிந்தனை கொண்ட ஐரோப்பியர்களையும் அமெரிக்கர்களையும் பொறுத்தவரையில் அது தான் உண்மை. தங்களின் சுகமான ஆடம்பர வாழ்விற்காக முன்னேறும், ஏழை நாடுகளைத் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தங்களின் எதிரிகளாக வரையறுத்துக் கொண்டவர்களை வீழ்த்துவதற்கு எப்படிப்பட்டக் கீழ்த்தரமான வழிமுறைகளையும் அவர்கள் மேற்கொள்வர். ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வியாபாரத்திற்காக வந்தக் காலகட்டத்திலும் சரி, காலனித்துவம் ஒழிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தையக் காலகட்டத்திலும் சரி, ஒரு நாட்டினைக் கைவசப்படுத்த வேண்டும் எனில், ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் முதலில் எடுக்கும் முயற்சி தங்கள் நாட்டு நிறுவனங்களை அந்நாட்டினுள் வியாபாரத்திற்காக ஊடுருவ விடுவதாகும்.

கிழக்கிந்திய கம்பெனி எனும் ஐரோப்பிய அரசு ஸ்பான்சர் செய்த காலனித்துவக் கம்பெனியிடமிருந்து இந்தியாவை மீட்க நடத்தப்பட்ட எண்ணற்ற உயிர்களைப் பலிகொண்ட இந்திய சுதந்திர வரலாற்றை நடுநிலையோடு சிந்தித்தால், அதில் முஸ்லிம்கள், குறிப்பாக உலமாக்களின் தன்னிகரற்ற தியாகங்களை குறிப்பிடாமல் அந்த வரலாறு முழுமை பெறாது. இதை மறைப்பது, மறுப்பது இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கே மிகப்பெரும் இழுக்காகும்.

இந்திய சுதந்திரப் போராட்டங்களில் முஸ்லிம்கள் சிந்திய இரத்தத்தின் அளவு மற்றவர்கள் வியர்வை கூட சிந்தியிருக்கமாட்டார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. வரலாற்றின் பக்கங்களுக்குள் சற்று ஆழமாகச் கால்பதிப்போம்.

வாஸ்கோடகாமா

கி.பி 1492ல் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி வீழ்த்தப்படுகிறது.

வாஸ்கோடகாமா கி.பி 1498 மே, 17ல் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார். வியாபாரத்தின் பெயரைக் கூரி இந்திய மண்ணில் கால்பதித்த மிகக் குறிய காலத்திலேயே கி.பி 1510ல் போர்ச்சுகீசியர்கள் கோவாநகரைக் கைப்பற்றுகிறார்கள்.

வாஸ்கோடகாமா வந்தது முதல் கோழிக்கோடு சாமுத்ரி அரசனுக்கும் பரங்கியருக்கும் இடைவிடாத போர் நடை பெற்று வந்தது. மலபார் பிராந்திய பரங்கியர் படைத்தலைவர் மார்டின் டி-ஸோஸா, 25 போர்கப்பல்களுடன் வடக்கிலிருந்த கோலத்ரி மன்னனின் ஆதரவோடு கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார்.

குஞ்சாலி மரைக்காயர்

கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது தான், "அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்" என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர். சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த இஸ்லாமிய வீரர். இக்காலகட்டத்தில் கடற்படையைக் குறித்து எவ்வித அறிவோ திட்டங்களோ சாமுத்ரி ராஜா உட்பட பெரும்பாலான இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1521ல் ஹென்றி டிமெனபெஸ் - லோப்வாஸ்-டி-சம்பாயோ ஆகியோர் அடங்கிய பரங்கிய கடற்படை, கோழிக்கோட்டு அரசன் சாமுத்ரியின் கடற்படைத்தளமான பொன்னானி மீது ஆக்ரமிப்பைத் தொடுத்தது.

இதையடுத்து அஹ்மது மரைக்காயர், அவரது தம்பி குஞசாலி மரைக்காயர், இவர்களது மாமா முஹம்மது அலி மரைக்காயர் ஆகியோர் கொச்சியிலிருந்து கோழிக்கோடு சென்று தங்கினார்கள்.

கி.பி. 1523ல் குஞ்சாலி மரைக்காயர் பரங்கியருக்கெதிராகப் போர் செய்ய 200 பெரிய கப்பல்களைத் தயாராக வைத்திருந்தார். கி.பி. 1542ல் பரங்கியருக்கும், குஞ்சாலி மரைக்காயர் படைக்கும் உக்கிரமானபோர் நடைபெற்றது. இப்போரில் குட்டி அலி பரங்கியரை கலங்கடித்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

கி.பி. 1528ல் பர்கூரில் குட்டி அலியின் படைகளும் போர்த்துக்கீசியப் படைகளும் கடுமையாக மோதிக் கொண்டன. மங்கலாபுரத்துக்கும் மவுண்ட் அலிக்கும் இடையில் நடைபெற்ற போரில் சின்னகுட்டி அலி போர்த்துக்கீசியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

முதல் வெற்றி

கி.பி. 1528ல் செத்வாய் என்னுமிடத்தில் போர்த்துக்கீசியர் பல கப்பல்கள் நிறைய இந்திய வளங்களை ஏற்றிக் கொண்டு பலத்த பாதுகாப்புடன் தங்கள் தாய் நாட்டிற்குக் கொண்டு செல்ல முயன்றபோது குஞ்சாலி மரைக்காயர் அக்கப்பல்களைத் தாக்கி, ஒரு வெள்ளையரையும் விடாமல் கொன்று குவித்து மாபெரும் முதல் வெற்றியைப் பெற்றார்.

கி.பி. 1531ல் பரங்கியரை கடற்போரில் கதிகலங்கச்செய்த அஹ்மது மரைக்காயர் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார்.

கி.பி. 1535ல் அட்மிரல் சுலைமான் பாட்ஷா, சமுத்ரியின் படையுடன் சென்று பரங்கியரை வென்று அவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றினார்.

கி.பி. 1537ல் நாநோடி குன்ஹா என்பவர், கவர்னர் பதவிக்கு வந்த போது தியோ-கோ-தே-எஸல்வேலி யாவின் தலைமையில் கோழிக்கோடு கடற்கரையை முற்றுகையிடவும் போப்பூர் நதிக்கரையில் உள்ள சாலியன் என்ற இடத்தில் கோட்டையைக் கட்டவும் முயன்றபோது குஞ்சாலி மரைக்கார் சாலியன் கோட்டையைத் தாக்கினார். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டின கடற்கரையிலும் போர் நடைபெற்றது. அங்கு 51 சிறப்புக் கப்பல்களில் 8000 வீரர்களுடன் குஞ்சாலி மரைக்காயர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1538ல் தூத்துக்குடி கடற்கரையில் போர்த்துக்கீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன. போர்த்துக்கீசிய படையை இங்கு குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார். இவ்வாறாக அந்நியருக்கெதிராக கற்பனைகளை மிஞ்சிய பெரும் சாதனை புரிந்த மாவீரன் குஞ்சாலி மரைக்காயர் கொழும்பில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி நாட்டுக்காக தன்னுயிர் ஈத்து வீரமரணம் எய்தினார்.

இவரை அடுத்து அவரது குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். 1570ல் போப்பூர் நதிக்கரையின் சாலியன் கோட்டை போரில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் வெற்றி பெற்று, சுமார் 65 வருடங்களாக நடைபெற்று வந்த அந்நியரின் கடலாதிக்கத்தை முறியடித்தார்.

இவருக்குப் பின் மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் தலைமைப் பொறுப்பேற்றார். 1572ல் பரங்கியர்படை மஸ்ஜிதுகளையும் கோயில்களையும் கொள்ளையிட்டு, கோழிக்கோடு, திருக்கொடி, கப்பக்காடு, பொன்னானி துறைமுகங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இவர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் 1586ல் அந்நியர் படையை வெற்றி கொண்டார்.

1589ல் இவரது மருமகன் குவாஜிமூஸா மரைக்காயர் மற்றோரிடத்தில் பரங்கியரைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமுத்ரி ராஜாவின் துரோகம், குஞ்சாலி மரைக்காயரின் மறைவு!

1595 -ல் நான்காம் குஞ்சாலி மரைக்காயரும் பரங்கியரை எதிர்த்து வந்தார். ஆனால் அப்போதைய கோழிக்கோடு அரசன், வாஸ்கோடகாமாவின் பேரனான பிரான்ஸிஸ்கோ-டி-காமாவுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டான். இப்பாதகனின் கீழறுப்பு வேலைகளை சற்றும் அறியாமல் மனத்தூய்மையோடு நாட்டிற்காக போராடி வந்த குஞ்சாலி மரைக்காயர் சமுத்ரி அரசனைச் சந்திக்க வந்தபோது அவரைப் பிடித்து பரங்கியரிடம் ஒப்படைத்து விட்டான். இதனால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஊண், உறக்கம் இன்றி கொடுமைப்படுத்தப்பட்டு, இறுதியில் தேசவிரோதி சாமுத்ரி ராஜாவின் கூட்டுச்சதியால் நான்காம் குஞ்சாலி மரைக்காயர் கொடுமையாகக் கொல்லப்பட்டார்.

ஹாஜி பக்கீர் முஹம்மது சேட் என்ற முஸ்லிமால் வழங்கப்பெற்ற (அப்போதைய) இரண்டு இலட்சம் ரூபாயின் மூலம் வாங்கப்பட்ட சுதேசிக்கப்பலின் மாலுமியான வ.உ.சி.க்கு வரலாற்றுப்பாடப்புத்தகத்தில் தனி இடம் ஒதுக்கிய இந்திய அரசு இருநூறுக்கும் அதிகமான சிறப்புப் போர் கப்பல்களைக் கொண்ட மாபெரும் கடற்படையை உருவாக்கி நூறு ஆண்டுகளாக அந்நியரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைப் பற்றி ஒருவரி கூட பாடப்புத்தகங்களில் இடம் பெறச் செய்யாதது நாட்டின் விடுதலைக்காக போரிட்ட வீரத்தியாகிகளை அவமதிப்பதாகாதா?

ஒரு முஸ்லிம் வாங்கிக் கொடுத்தக் கப்பலின் மாலுமியாக இருந்த வ.உ. சிதம்பரனாருக்கு வரலாற்றில், "கப்பலோட்டிய தமிழன்" பட்டம். இந்தியச் சுதந்திரப்போருக்கு முன்னோடியாக ஒரு நூற்றாண்டுகாலம் பரங்கியர்களை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட இந்தியப் போர் கப்பல்களை உருவாக்கி எதிர்த்து மடிந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைக் குறித்து ஒரு வரி கூட வலாற்றில் இல்லை. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த மிகப்பெரும் அநீதியாகும் இது.

அந்நியருக்கெதிராக தெற்கு முனையில் சுமார் ஒரு நூற்றாண்டுக்காலம் நாட்டைப் பாதுகாக்க, முஸ்லிம்கள் செய்த தன்னிகரில்லா தியாகங்களின் சில துளிகள் தான் இவை.

இதேகாலகட்டத்தில் நாட்டின் வடப்புறத்தில் நாட்டிற்கும் இஸ்லாத்திற்கும் மிகப்பெரிய போராபத்துகள் எதிர் நோக்கிக் கொண்டிருந்த வேளையில், அந்நியரை விரட்டி இந்தியத் திருநாட்டைப் பாதுகாக்க தொலைநோக்கு பார்வையுடன் முஸ்லிம்கள், குறிப்பாக உலமாக்கள் செய்த தன்னலமற்ற தியாகங்கள் அளப்பரியதாகும்.

< பகுதி-1 | பகுதி-3 >

இந்திய போர் வரலாறு

இந்திய சுதந்திரப் போர் வரலாறு காலவரிசைப்படி

vochidambaram 1498 - வாஸ்கோடகாமா இந்திய வருகை
1600 - இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி
1615 - ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை
1757 - பிளாசி யுத்தம்
1770 - வங்காளப் பஞ்சம், சன்னியாசி எழுச்சி
1779 - கட்டபொம்மன் தூக்கு
1806 - வேலூர் கோட்டை புரட்சி
1857 - முதல் இந்திய சுதந்திரப் போர்
1858 - பிரிட்டிஷாரின் நேரடி அதிகாரம்
1877 - விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டல்
1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
1905 - வங்காளப் பிரிவினை
1908 - திலகர், வ.உ.சி. கைது
1911 - ஆஷ் கொலை
1913 - கத்தர் கட்சி உதயம்
1914 - முதல் உலகப் போர் ஆரம்பம்
1915 - காந்தியின் இந்திய வருகை
1916 - கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல்
1918 - ரௌலட் சட்டம்
1919 - ஜாலியன் வாலாபாக் படுகொலை
1920 - கிலாபாத், ஒத்துழையாமை இயக்கம் துவக்கம் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உதயம்
1921 - மாப்ளர் எழுச்சி
1922 - சௌரி சௌரா மக்கள் எழுச்சி, ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்படல்
1925 - கான்பூர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
1928 - சைமன் கமிஷன் வருகை
1929 - டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங்கின் குண்டு வீச்சு, லாகூர் காங்கிரஸில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம்
1930 - உப்பு சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு இயக்கம், சிட்டகாங் புரட்சி
1931 - பகத்சிங் தூக்கிடப்படல், இரண்டாம் வட்டமேஜை மாநாடு
1934 - அகில இந்திய கிஸான் சபை, அகில இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயம்
1937 - பார்வர்டு பிளாக் கட்சி உதயம்
1939 - இரண்டாம் உலகப் போர் துவக்கம்
1940 - தனிநபர் சத்தியாக்கிரகம்
1942 - வெள்ளையனே வெளியேறு தீர்மானம்
1943 - நேதாஜி இந்திய ராணுவம் அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல்
1946 - கப்பற்படை எழுச்சி
1947 - தேசப் பிரிவினை, இந்தியா சுதந்திரமடைதல் பாகிஸ்தான் உதயம்