சாந்தல் போராட்டம் – இந்திய விடுதலைப் போரில் ஆதிக்கச் சாதியினரால் ம(றை)றக்கப்பட்ட வரலாறு
ம்ரிகா ( Mrigayaa ) - மிதுன் சக்கரவர்த்தி முதன் முதலில் நடித்து வெளியான இந்திப் படம். 1976-ல் வெளியான இந்த இந்திப் படம் இன்றைய தலைமுறையில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இப்படத்தில் நடித்ததற்காக மிதுன் சகரவர்த்திக்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படத்தின் பிண்ணனி பிரித்தானிய காலனி ஆதிக்கத்து இந்தியாவில் நடந்த பெரும் கலகமான சாந்தல் கலகப் புரட்சியினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பெரும் வெற்றிப்படம். ஆனால் இப்படத்துக்கு விருது கிடைத்தது தவிர சாந்தல் கலவரம் மறக்கப்பட்டும் விட்டது. பிச்சைக்காரனின் வலைப்பூவில் மீண்டும் இதனைப் பற்றி ஒரு சிறுப் பதிவினை எழுதினார். ஆனால் சாந்தல் கலவரம் பற்றி இன்றைய நிலையில் பெரிதாக யாருக்கும் தெரியாத நிலை உள்ளது. அதனை மீண்டும் ஒரு முறை நினைவுப் படுத்தியே இப்பதிவு. அக்கலவரத்தில் உயிர் துறந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் இன்னுயிருக்கு இது சமர்ப்பணம்.
நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை. தன்னை ஒரு கம்யூனிஸ்டாகக் காட்டிக் கொண்டு பணம் சம்பாதிக்கும் இன்றைய இழி நிலையில், உண்மையை எழுத ஒரு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டியது இல்லை எனக் கூறிவிட்டு தொடர்கிறேன்.
சாந்தல் பழங்குடியினர்: ( Santhal Native Tribes )
சாந்தல் பழங்குடியினர் மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவில் வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள். மகாபாரத்தில் வரும் ஏகலைவன் சாந்தல் இனத்தில் தோன்றிய மாவீரன். இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி இனங்களில் ஒன்றான சாந்தல் இனத்தின் இன்றைய மக்கள் தொகை அறுபது லட்சம் பேர் வரை இருக்கின்றனர். பெரும்பாலும் சாந்தல்கள் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிகார், ஒரிசாவில் வாழ்கிறார்கள். இந்த நான்கு மாநிலங்களில் சாந்தல்லாண்ட் பிரிந்துக் கிடக்கிறது என்றுக் கூறலாம். இந்தியாவில் குடியேறிய பூர்வக் குடிகளின் வம்சமே இந்த இனம். இவர்களது மொழி இந்தோ-ஆரியரின் மொழி கிடையாது. அது ஆஸ்திரேலியாவிலும்-மலேசியாவிலும் பேசப்படும் பழங்குடி மொழிகளோடு தொடர்புடைய ஒரு மொழி ஆகும்.
சாந்தல் பழங்குடியினர் எப்போதுமே சாண்டலாண்டினை ( Santhal Land ), அக்காடுகளை தமது தாய் பூமியாக வணங்கி வந்தவர்கள். இந்தோ-ஆரியர்களை எதிர்த்துக் காலம் காலமாக போர் புரிந்து வந்தவர்கள். இன்றும் வடநாட்டில் பழமொழிகள் இந்தோ-ஆரிய தேவ நகரி எழுத்துக்கு மாறிவிட்டாலும். தமது தனித்தன்மையை நிலை நிறுத்தும் வண்ணம் ஒல் சிக்கி என்னும் புதிய எழுத்து முறையில் தமது மொழியை எழுதி வருகிறார்கள். பண்டித இரகுநாத முர்முவினால் இவ்வெழுத்துக்கள் உருவாக்கம் பெற்றன. இதில் இருந்தே சாந்தல் இன மக்கள் தமது தனித்தன்மையை நிறுவி வாழ்வதில் எப்படி பிரியம் கொண்டவர்களாய் இருக்கின்றனர் என்பதை அறியலாம். அவர்களின் மொழி மட்டுமில்லை, இசை, கலாச்சாரம், சமய வணக்கங்கள் அனைத்துமே ஆதிக் கால இந்தியாவின் மிச்சங்கள். ஒன்றிலும் இந்தோ-ஆரியத்தனம் புக முடியவில்லை. இதுவே அவர்களின் பெரிய வெற்றி. அவர்களின் இனக்குழுவில் ஆரிய நால் வருணாசிரமும் கிடையாது. சாதிகள், உட்சாதிகள், முச்சாதிகள் என்ற எந்தக் கேவலமும் கிடையாது. பிறப்பால் பிரிவுகள் கிடையாது. உழைத்து வாழும் ஒரு பெரும் கூட்டம்.
சாந்தல் கலகம்: ( Santhal Revolt )
இப்படியாக ஆதிக் காலம் முழுதுமே எந்தவொரு அரசுக்கும் கீழே வராது, சாந்தல் லாண்ட் சாந்தல் இன மக்களால் ஆளப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்தது. இப்படியான சூழலில் இந்தியாவினை மெல்ல மெல்ல பிரித்தானியர்களின் ஆளுகைக்கு வருகின்றது. சாந்தல்லாண்ட் பகுதிகளும் பிரித்தானியர்களின் ஆட்சியின் கீழ் வருகிறது. ஆரம்பக் காலக்கட்டங்களில் பிரித்தானிய அரசு சாந்தல்லாண்டை சுரண்டவில்லை, மக்களின் சட்டத்திட்டங்களை மீறவில்லை. மயுர்பஞ்ச், சோட்டாநாக்பூர், மிட்னாபூர் என சாந்தல்லாந்தில் உள்ளா காட்டின் வளங்களை அவர்களின் அனுமதியோடே பிரித்தானியர்கள் எடுத்து வந்தார்கள். ஆனால் இந்நிலை நீடிக்கவில்லை.
வங்காளத்தில் இருந்த பிரித்தானிய அரசின் ஏவல்களாகவும், கைக்கூலிகளாகவும் ஆதிக்க சாதியினர், பிராமணரும் நுழைகின்றனர். பிரித்தானிய அரசு ஏஜெண்டுகளாக செயல்பட்ட இவர்கள், சாந்தல்லாண்டின் காடுகளையும், நிலங்களும் ஆதிக்கச் சாதியினர் கைப்பற்ற நினைத்தனர். இதனால் சில நிலங்களை ஜமீந்தார்களும், ஆதிக்கச் சாதியினரும் கைப்பற்ற தொடங்கினர். ஆரம்பக் காலங்களில் பெரிய எதிர்ப்பு தெரிவிக்காத சாந்தல் இனத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பின்வாங்கி ராஜ்மகால் மலையடிவாரங்களுக்கு சென்று வசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வங்காளத்திலும், ஒரிசாவிலும் ஆதிக்கச் சாதியினர் தமது கைப்பிடிக்குள் கொண்டு வந்தனர். சிறிதுக் காலங்களுக்கு பிறகு வட்டிக் காரர்கள் என்றப் போர்வையில் சிறுகடன்களாய் கொடுக்க ஆரம்பித்தனர் ஜமீந்தாரர்களும் ஆதிக்கச் சாதியினரும், அவர்களிடம் கடன்களைப் பெற்ற சாந்தல் இன மக்கள், வட்டி, மீட்டர் வட்டி எனக் கட்ட முடியாமல் போனது, அதற்கு ஈடாக அம்மக்களின் நிலங்களை எழுதி வாங்கிய ஆதிக்கச் சாதியினர் கொஞ்சம் கொஞ்சமாக சாந்தல் இன மக்களை வயல் வேலைகளில் ஈடுப்படுத்தி, பின்னர் அவர்களை கொத்தடிமைகளாக மாற்றினர். இருப்பினும் கடும் உழைப்பாளிகளான சாந்தல் இனத்தவர் அவர்களின் கடன்களை உழைத்துக் கொடுத்தும் வந்தனர். ஆனால் மீட்ட்ர் வட்டி பெருகி பெருகி, அவர்களை தமது கைப்பிடிக்குள் அடிமைகளைப் போல கொண்டுவந்தனர் ஆதிக்கச் சாதியினர் பலர். சாந்தல் இனப் பெண்களை ஆதிக்கச் சாதியினர் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். பல்லாண்டுக் காலமாக சுதந்திரமாக சாந்தல்லாந்தில் வாழ்ந்த சாந்தல் இனத்தவர்கள், தமது சுதந்திரம் பறிபோவதை உணரத் தொடங்கிய காலம் அது.
அப்படியான ஒரு சூழலில் தான் 1855ம் ஆண்டும் ஜூன் 30-ம் நாள், சாந்தல் இன விடுதலைக்காக போராடிய இரு பெரும் சகோதரர்களான சிடோ முர்மு, கங்கு ஆகிய இருவரும் பத்தாயிரம் பேரைத் திரட்டி பிரித்தானியர்களுக்கு எதிரான போரை பிரகடனப் படுத்தினர். அன்றையக் காலக்கட்டத்தில் பிரித்தானிய அரசை எதிர்த்துக் கலகங்கள் செய்வது என்பது மலையை எதிர்த்து நிற்கும் தைரியம் வேண்டும்.
சொல்லப்போனால் இது கலகம் என்பதை விட போர் என்றே சொல்லலாம். பிரித்தானியப் படைகளை சாந்தல் லாந்தில் இருந்து விரட்டும் எண்ணத்தோடு இப்போர் ஆரம்பம் ஆனது. வெறும் வில் அம்புகளை, வைத்து கெரில்லா யுத்தமாக தொடங்கியது. முதலில் பெரும் வெற்றிகளை ஈட்டி வந்த சாந்தல் இனத்தவர், பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கினர். பிரித்தானியரையும், சாந்தல் இனத்தவரையும் மோதச் செய்து ஆதிக்கச் சாதியினர் நழுவிக் கொண்டனர். பிரித்தானிய நவ ஆயுத பலங்களுக்கு முன் சாந்தல் இன மக்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மலைகளிலும் காடுகளிலும் ஆயிரம் ஆயிரம் சாந்தல் போராளிகள் கொன்று குவிக்கப் பட்டனர். அந்தக் காலங்களில் செய்திகளையும், மீடியாக்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரித்தானியர்களும், ஆதிக்கச் சாதியினரும் இந்த செய்திகளைப் பரவ விடாமல் வெற்றிகரமாகத் தடுத்தனர்.
மேஜர் பர்ரோவின் தலைமையிலான வங்காளப் பிரித்தானியப் படைகளி இப்போரில் வெற்றியை ஈட்டியது. ஆனால் ஆயிரம் ஆயிரம் சாந்தல் இளைஞர்களில் தலைகள் துண்டாடப்பட்டதாகவும், பல்லாயிரம் சாந்தல் இனப் பெண்கள் பாலியல் வல்லுறவுக் கொண்டுக் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது, ஆனால் அவற்றை விசாரிக்க பிரித்தானிய அரசோ, இந்திய அதிகாரிகளோ விரும்பவில்லை. அதை அப்படியே மறக்கச் செய்தனர். இப்போரில் சாந்தல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்டனர். சுமார் 15,000 சாந்தல் இனத்தவர் இப்போரில் மடிந்தனர். இந்திய விடுதலைப் போர்களிலேயே குறுகிய காலத்தில் இவ்வளவு உயிர்ப்பலிக் கொடுத்தது சாந்தல் கலகப் போர் தான்.
ஆனால் 1857-ல் உயர்வர்க்க இந்துக்கள், முஸ்லிம்கள் நடத்திய யுத்தத்தை பரப்பி இன்று வரை வரலாற்று புத்தகங்களில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நாம், சாந்தல் கலகத்தைப் பற்றி படிக்கவோ, தெரிந்துக் கொள்ளாமலோ இருந்து வருவது நமக்கு இழுக்காகும்.
ஆனால் சாந்தல்களின் தியாகமும், போராட்டக் குணமும் இன்றும் வேறு வடிவங்களில் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. சாந்தல் கலகம் இந்தியா முழுதும் அறியப்படாமல் போயிருந்தாலும், அதற்குப் பின் பல போராட்டங்களுக்கு அது வித்திட்டது.
1867-68-ல் ஒரிசாவில் நடந்த பூயான், ஜுவாங்கோ கலகம்,
1837-56 வரையிலான கந்தா மக்கள் கலகம், ஒரிசா
1895-ல் நடந்த பிர்சா இயக்கம், பிகார்
1978-82-ல் நடந்த ராஜ்மகால் மலைகளில் பகாரியாக்களின் கலகம்
1837-56 வரையிலான கந்தா மக்கள் கலகம், ஒரிசா
1895-ல் நடந்த பிர்சா இயக்கம், பிகார்
1978-82-ல் நடந்த ராஜ்மகால் மலைகளில் பகாரியாக்களின் கலகம்
போன்றவை அதில் மிக முக்கியமானவை.
சாந்தல் கலகம் வெற்றியளிக்கவில்லை என்றாலும், இக்கலகம் பிரித்தானிய அரசின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. பழங்குடி மக்களின் நிலங்களையும், நலங்களையும் முழுதும் பேணாமல் போனாலும் அவர்களைத் தாஜாப் பண்ண சில சட்டங்களை நிறைவேற்றினார்கள்.
1870, இந்திய அரசுச் சட்டம்
1874-ல் அட்டவணை மாவட்டங்கள் சட்டம்
1890-ல் மொண்டாகு-கெல்ம்ச்ஃபொரட் சீர்த்திருத்தம்
1919-ல் இந்திய அரசுச் சட்டம்
1935-ல் இந்திய அரசுச் சட்டம்
1874-ல் அட்டவணை மாவட்டங்கள் சட்டம்
1890-ல் மொண்டாகு-கெல்ம்ச்ஃபொரட் சீர்த்திருத்தம்
1919-ல் இந்திய அரசுச் சட்டம்
1935-ல் இந்திய அரசுச் சட்டம்
ஆகியவை பழங்குடிகளின் நிலங்களைப் பேணுவதற்கு சில வகையில் உதவின.
சாந்தல்களின் போராட்டம் தான் ஜார்க்கண்ட இயக்கத்தைத் தோற்றுவித்தது. சாந்தல் லாந்து அல்லது ஜார்கண்ட் தனிமாநில கோரிக்கை 1920-ல் தோன்றியது. பிகார், ஒரிசா, மேற்குவங்கம், மத்தியப் பிரதேசங்களில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட சாந்தல்களின் நிலங்களை இணைத்து சாந்தல் லாண்ட் அல்லது ஜார்க்கண்ட மாநிலம் அமைக்க போராடி வந்தனர். இதனால் சாந்தல் மக்களின் மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் உறுதி செய்ய முடியும் என அவர்கள் நம்பினர். முக்கியமாக சாந்தல்களின் நிலங்களைத் தான் இன்று இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முயல்கிறது. அவர்கள் உட்பட அனைத்து சகோதர மழைவாழ், பழங்குடிகளின் நிலங்களை வங்காளத்தில் இந்திய கம்யூனிஸ்ட்களாகவும், மார்க்சிய கம்யூனிஸ்ட்களாகவும் அரசியல் நடத்தும் ஆதிக்கச் சாதியினர் கைப்பற்றி வருகின்றனர். அதனை எதிர்த்தே நக்ஸ்லபாரி போராட்டங்கள் ஆரம்பம் ஆகின். அவர்களது போராட்டம் இன்று வரை தொடர்கிறது நம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
எடுத்துக்காட்டாக பழங்குடி இந்தியர்களின் நிலங்களில் இருந்துப் பெறப்படும் வளங்களை அவர்களுக்காக எந்த அரசும் பயன்படுத்துவது இல்லை. சுமார் 150 ஆண்டுக் காலப் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்தியா விடுதலைப் பெற்றாலும், வெள்ளையரால் இழக்கப்பட்ட விடுதலையை மீட்க இன்றும் அவர்கள் போராடி வருகின்றனர்.
அதன் முதற்கட்ட வெற்றியாக நவம்பர் 15, 2000-ம் ஆண்டு ஜார்கண்ட், சத்தீஸ்கர் என்னும் இரண்டு மாநிலங்கள் உருவாகின. இந்திய வரலாற்றிலேயே பழங்குடிகளுக்கு என உருவான முதல் மாநிலம் ஜார்கண்ட் தான். ஆனால், இன்றும் மாநிலத்தை ஆளும் உரிமையைக் கொடுக்கத் தவறி வருகின்றனர் ஆதிக்கச் சாதியினரும், மத்திய அரசும். பழங்குடிகளை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கவே இன்னும் சாந்தல் மொழியினை அரசு தேசிய மொழியாய் அங்கீகாரம் செய்யாமல் காலம் கடத்தி வருகிறது. இன்னும் இவ்விரண்டு மாநிலங்களிலும் ஆளும் மொழியாக இந்தியும், ஆளும் அதிகாரிகளாக மஹாஜன்களும், ஆதிக்கச் சாதியினரும் இருந்து வருவது வேதனையான விசயம் ஆகும்.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மட்டுமில்லாமல், வங்காளத்தின் மிட்னாப்பூர் உட்பட்ட பகுதிகள், ஒரிசாவின் மேற்கு மாவட்டங்களை இணைத்து பழங்குடி மக்களின் சாந்தல் லாண்ட் உருவாக்கல் வேண்டும், அம்மாநிலத்தின் வளங்களையும், ஆளும் அதிகாரத்தையும் அம்மக்களிடமே கொடுக்கப்படல் வேண்டும். அவர்களின் மொழி கலாச்சாரம் நிலம் ஆகிய உரிமைகளை இந்திய அரசு பேண முன்வந்தால் மட்டுமே நக்சல்பாரி இயக்கங்களால் இந்தியாவின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது என நொண்டிச்சாக்கை மூட்டைக் கட்டி வைக்க முடியும்.
இந்திய அரசு செய்ய வேண்டியவை:
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசாவின், வங்காளத்தின் பகுதிகளை இணைத்து சாந்தல்லாந்து உருவாக்கப்படல் வேண்டும்.
சாந்தல், குருக் போன்ற பழங்குடி மொழிகளை அட்டவணை மொழிகளில் இணைக்க வேண்டும். இந்தியின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும்.
சாந்தல் லாந்தின் நிலம், காடுகள், கனிம வளங்களை நிர்வாகம் செய்யவும், அவற்றைப் பயன்படுத்தும் உரிமைகளை அம்மக்களிடமே கொடுக்க வேண்டும்.
அப்பகுதிகளில் இருக்கும் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை தடுக்க வேண்டும்.
சாந்தல் கலகத்தில் உயிர் இழந்த மக்களுக்காக பிரித்தானிய அரசு மன்னிப்புக் கோர வேண்டும். அதற்கு இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
சாந்தல், குருக் போன்ற பழங்குடி மொழிகளை அட்டவணை மொழிகளில் இணைக்க வேண்டும். இந்தியின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும்.
சாந்தல் லாந்தின் நிலம், காடுகள், கனிம வளங்களை நிர்வாகம் செய்யவும், அவற்றைப் பயன்படுத்தும் உரிமைகளை அம்மக்களிடமே கொடுக்க வேண்டும்.
அப்பகுதிகளில் இருக்கும் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை தடுக்க வேண்டும்.
சாந்தல் கலகத்தில் உயிர் இழந்த மக்களுக்காக பிரித்தானிய அரசு மன்னிப்புக் கோர வேண்டும். அதற்கு இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
No comments:
Post a Comment