இந்திய-பாகிஸ்தான் போர், 1965
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இந்திய-பாகிஸ்தான் போர், 1965 | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| இந்திய-பாகிஸ்தான் போர்களின் பகுதி | |||||||||
| |||||||||
| பிரிவினர் | |||||||||
| இந்தியா | பாகிஸ்தான் | ||||||||
| தளபதிகள் | |||||||||
| ஜொயந்தோ நாத் சவுத்திரி ஹர்பாக்ஷ் சிங் | அயூப் கான் முசா கான் | ||||||||
| இழப்புகள் | |||||||||
| 3,264 பேர் கொல்லப்பட்டனர்[1] 8,623 பேர் காயம்[1] (ஜூலை முதல் போர்நிறுத்தம் வரை) | 4,000 - 8,000 பேர் கொலை அல்லது கைப்பற்றப்பட்டனர்[2][3][4] (ஜூலை முதல் செப்டம்பர் 6) 3,800 பேர் கொலை[5] (செப்டம்பர் 6 - 22) | ||||||||
போரின் பெரும் பகுதி தரைப்படைகளினால் பிரச்சினைக்குரிய காஷ்மீர் பகுதியிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பன்னாட்டு எல்லைப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டது. 1947 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இப்போரின் போதே காஷ்மீர் எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் விமானப் படைகள் தரைப் படைக்கு உதவியாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். ஏனைய இந்திய-பாகிஸ்தான் போர்களைப் போலவே இப்போர் நிலவரங்கள், மற்றும் விவரங்கள் பெருமளவு வெளியில் தெரிய வரவில்லை.
போரின் தொடக்கத்தில் இரு நாடுகளும் சம நிலையிலேயே இருந்தன. இந்தியாவின் டித்வால், யூரி, பன்ச் ஆகிய பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றியது. பாகிஸ்தானின் மூன்று முக்கிய இராணுவத் தளங்களை இந்தியா கைப்பற்றியது. செப்டம்பர் 1 இல் ஜம்மு பகுதிக்குள் அக்நூர் பகுதியில் பாகிஸ்தானின் ஊடுருவலை இந்தியா விமானப் படையின் உதவியுடன் தடுத்து நிறுத்தியது.
செப்டம்பர் 6, 1965 இல் பன்னாட்டு எல்லையைக் கடந்து லாகூர் நகரை அண்டினர்[6]. ஒரு மணி நேரத்தில் லாகூரைக் கைப்பற்றுவோம் என இந்தியா அறிவித்தது. அதே நாளில் பாகிஸ்தான வான் படையினரின் தாக்க்குதலில் 10 இந்திய விமானங்கள் தகர்க்கப்பட்டன. செப்டம்பர் 10 ஆம் நாளில் இந்தியாவில் அம்ரித்சர் நகரை பாகிஸ்தான பீரங்கிப் படையினர் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
No comments:
Post a Comment